சந்தையில் மீண்டும் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விற்க முடியாததால் சீனியைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 122 ரூபாவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபாவும் நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை செப்டம்பர் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இறக்குமதியாளரால் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச மொத்த விலை 116 ரூபாவாகும்.
கொழும்பிற்கு வெளியில் உள்ள பல கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சீனி விற்பனை செய்யப்படுவதைக் காணலாம்.