follow the truth

follow the truth

November, 20, 2024
Homeவிளையாட்டுமுதன்முறையாக LPL இறுதிப்போட்டியில் Dambulla Aura

முதன்முறையாக LPL இறுதிப்போட்டியில் Dambulla Aura

Published on

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(17) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்ற LPL தொடரில் தம்புள்ள ஓரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்காத நிலையில், குசல் மெண்டிஸ் தலைமையில் கோல் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணியின் பணிப்பின்படி கோல் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. கோல் அணி மாற்றங்களின்றி களமிறங்க, தம்புள்ள அணி ஓய்வளித்திருந்த முன்னணி வீரர்களை மீண்டும் அணியில் இணைத்திருந்ததுடன், பென் மெக்டோமர்ட் உபாதை காரணமாக வெளியேறினார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் டைட்டன்ஸ் அணியின் முதல் விக்கெட் ஓட்டங்களின்றி இழக்கப்பட்டது. பானுக ராஜபக்ஷ ஆட்டமிழந்து வெளியேற, லிடன் டாஸ் பிரகாசிக்க தவறினார். 25 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, லசித் குரூஸ்புள்ளே மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் 51 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்றனர்.

எனினும் தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் சகீப் அல் ஹஸன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த வீரர்கள் குறைந்த ஓட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் லசித் குரூஸ்புள்ளே இறுதி ஓவர் வரை தனியாளாக களத்தில் நின்று ஓட்டங்களை பெற்றார். தன்னுடைய முதல் அரைச்சதத்தை பதிவுசெய்த இவர் 61 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, கோல் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள ஓரா அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நேர்த்தியான ஆரம்பத்தை கொடுத்தனர். வேகமாக ஆடிய அவிஷ்க பெர்னாண்டோ 14 பந்துகளில் 24 ஓட்டங்களை பெற்று சகீப் அல் ஹஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து சதீர சமரவிக்ரம 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் இழக்கப்பட்டன.

குறித்த இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றிருந்த போது குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்களுடன் டெப்ரைஷ் சம்ஷியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார். எனினும் மறுமுனையில் குசல் பெரேரா 33 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கடைசி ஓவரின் 4வது பந்தில் தம்புள்ள ஓரா அணி வெற்றியிலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றதுடன், இன்று இரவு நடைபெறும் ஜப்னா கிங்ஸ் மற்றும் பி லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான எலிமிடேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இரண்டாவது குவாலிபையர் பொட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச...

சாம்பியன்ஸ் கிண்ண பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு ஓய்வு

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ்...