நாடாளுமன்றக் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பணியாளர்கள் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கும் தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.