2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான டிக்கெட் விற்பனை இன்று(17) நண்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்த ஆண்டு ஆசிய கிண்ண போட்டியில் இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான முதல் கட்ட டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 17 (இன்று) மதியம் 12.30 மணி முதல் (12 pm PST) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை pcb.bookme.pk இணையதளத்தில் வாங்கலாம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 7.00 மணிக்கு (6.30 pm PST) தொடங்க உள்ளது. மேலும், செப்டம்பர் 2-ம் திகதி நடைபெற உள்ள இந்திய-பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இந்த இரண்டாம் கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்குவதில், ஒரு தேசிய அடையாள அட்டை/பாஸ்போர்ட் மூலம் நான்கு டிக்கெட்டுகள் வரை வாங்க முடியும், ஆனால் இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கு, இரண்டு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே என, சிறப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள இந்த வருட ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள முதலாவது போட்டி, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆகஸ்ட் 31ஆம் திகதி பல்லேகலவில் நடைபெறவுள்ளது.
அந்த போட்டியும் சேர்த்து இந்த ஆண்டு 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த வாரம் தொடங்கியது.