பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் சகலவிதமான சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் இதனை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதுவரையில் 27 டெஸ்ட் போட்டிகள் 91 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 36 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன், வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ், இதுவரை மொத்தமாக 237 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ள வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.