பாகிஸ்தான் அணிக்கெதிரான 03 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி இன்று இலங்கையை வந்தடைந்தது.
மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதலிரண்டு போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.