காலஞ்சென்ற கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெலமிடியாவே குசலதம்ம தேரர் தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.