follow the truth

follow the truth

January, 23, 2025
Homeவிளையாட்டுஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா

ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா

Published on

லங்கா பிரீமியர் லீக் தொடரின் (LPL) ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் தம்புள்ள ஓரா அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தம்புள்ள ஓரா அணிக்கு வழங்கியிருந்தது.

பந்துவீசுவதற்கு ஆரம்பித்திருந்த ஜப்னா கிங்ஸ் அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்தது. அவிஷ்க பெர்னாண்டோ முதல் ஓவரின் முதல் பந்தில் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து குசல் மெண்டிஸ் முதல் ஓவரின் 4வது பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு ஓட்டத்துக்கு தங்களுடைய முதல் 2 விக்கெட்டுகளையும் இழந்து தம்புள்ள ஓரா அணி தடுமாறியது. குறித்த தடுமாற்றத்திலிருந்து குசல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அணியை மீட்க தொடங்கினர்.

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இவர்கள் இருவரும் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுவாக்கினர். துரதிஷ்டவசமாக சதீர சமரவிக்ரம (30 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க தொடர்ச்சியாக விக்கெட்டுகள் பறிகொடுக்கப்பட்டன.

தனியாளாக போராடி குசல் பெரேரா 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை பெற முனைந்த ஹெய்டன் கெர் 25 ஓட்டங்களை பெற்றார். இவர்களின் இந்த பங்களிப்புடன் தம்புள்ள ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. ஜப்னா அணியின் பந்துவீச்சை பொருத்தவரை இந்த ஆண்டு தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய சொஹைப் மலிக் மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா அணிக்கு ஆரம்பம் முதல் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது. தம்புள்ள அணியின் ஹஸன் அலி, பினுர பெர்னாண்டோ மற்றும் ஹெய்டன் கெர் ஆகியோர் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.

இதில் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், சரித் அசலங்க, தவ்ஹித் ஹிரிடோய் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். எனவே 27 ஓட்டங்களுக்கு ஜப்னா அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

மத்திய வரிசையில் சொஹைப் மலிக் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு பக்கம் ஓட்டங்களை குவிக்க தொடங்க, மறுபக்கம் துனித் வெல்லாலகே சிறிய இணைப்பாட்டமொன்றை கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்புடன் அடுத்துவந்த திசர பெரேரா மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இதன் காரணமாக 72 ஓட்டங்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்த சொஹைப் மலிக் ஓட்டங்களை ஒருமுனையில் குவித்தார். இவர் இறுதிவரை களத்தில் நின்று ஓட்டங்களை குவித்தாலும் மறுமுனையில் துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்று 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஜப்னா கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 34 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சொஹைப் மலிக் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசியதுடன், அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 53 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஹஸன் அலி மிகச்சிறப்பாக பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி 6 புள்ளிகளுடன் புள்ளப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஜப்னா கிங்ஸ் அணி மேலும் பின்னடைவை சந்தித்து 4வது இடத்தை பிடித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இன்று (23) நடைபெற்ற போட்டியில்...

பாகிஸ்தானை இந்தியா அவமானப்படுத்துகிறதா?

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ மீண்டும் ஒரு இடியை இறக்கி இருப்பது கிரிக்கெட் உலகில்...

ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்...