follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுமுல்லேரியா கொலை - சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

முல்லேரியா கொலை – சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

Published on

முல்லேரியா – மீகஹவத்தையில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று(27) அறிவித்துள்ளது.

மீகஹவத்தையில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த இனந்தெரியாத நபரால் நேற்றைய தினம் (26) வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அங்கிருந்தோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், பிரதான சந்தேக நபர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக நொஹான் ஜிலே என்ற பெயருடைய 30 வயதான நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் 071 859 1727, 077 7370360, 071 8592279 ஆகிய இலக்கங்களுடன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...