follow the truth

follow the truth

November, 9, 2024
Homeஉலகம்அமெரிக்காவில் 5 – 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு Pfizer

அமெரிக்காவில் 5 – 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு Pfizer

Published on

அமெரிக்காவில் 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer ​கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, Pfizer ​தடுப்பூசியை 05 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றுவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதியை, அடுத்த சில வாரங்களுக்குள் வழங்குவதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வயது பிரிவைச் சேர்ந்த சிறுவர்களுக்கு Pfizer ​தடுப்பூசி பாதுகாப்பானதென்பதை, மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் காண்பிப்பதாக அதன் உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு Pfizer ​தடுப்பூசியை அமெரிக்கா முன்னரே ஏற்றிவருகின்றது.

இந்தநிலையில், தற்போதைய புதிய தீர்மானத்தின் கீழ் 28 மில்லியன் அமெரிக்க சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இந்த புதிய தீர்மானத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை அத்துடன் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்பிரிவு ஆகியவற்றின் மேலதிக அனுமதியைப் பெறவேண்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு – 21 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச...

நைஜீரியாவில் மின்வெட்டு – மக்கள் அவதி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகின்றமையினால் மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா...

வறண்ட பாலைவன நிலப்பரப்பில் முதல் முறையாக பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன...