follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஇத்தாலியில் தனது 2 பிள்ளைகளை கொலை செய்து தலைமறைவாகிய இலங்கை தாய்

இத்தாலியில் தனது 2 பிள்ளைகளை கொலை செய்து தலைமறைவாகிய இலங்கை தாய்

Published on

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார்.

வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் பிள்ளைகளின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என விசாரணைகளின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...