எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் ட்விட்டர் தளத்தினை இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளமையானது பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபாசம் மற்றும் சூதாட்டம் போன்ற “எதிர்மறை” உள்ளடக்கத்திற்கு எதிரான நாட்டின் கடுமையான சட்டங்களுக்கு இணங்காத தளங்களின் ‘டொமைன்’கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தின் தன்மையை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்கம் X ஐத் தொடர்பு கொண்டதாகக் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை அமைச்சின் பணிப்பாளர் ஜெனெரல் உஸ்மான் கன்சோங் (Usman Kansong) தெரிவித்திருந்தார்.
“.. நாங்கள் ட்விட்டரின் பிரதிநிதிகளுடன் பேசினோம், X.com ஐ ட்விட்டர் இனால் பயன்படுத்துகிறது என்று அவர்கள் எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்கள்” என உஸ்மான் கன்சோங் அந்நாட்டு ஊடகங்களுக்கு நேற்று(25) தெரிவித்துள்ளார்.
அதாவது, நாட்டின் 270 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 24 மில்லியன் பயனர்களைக் ட்விட்டர் கொண்டுள்ளதோடு, இவர்களால் ட்விட்டர் தளத்தினை கையாள முடியாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.