குளியாபிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா தெரிவித்துள்ளார்.
அன்டிஜென் பரிசோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டி – எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நாட்டில் மீண்டும் கொவிட் அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.