follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியில் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியில் திருத்தம்

Published on

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...