ஸ்வீடனின் நேட்டோ உறுப்புரிமைக்கான தடைகளை துருக்கி நீக்கியுள்ளது.
இதன்படி, ஸ்வீடனுக்கு 32வது நேட்டோ உறுப்புரிமை வழங்குவதற்கான பிரேரணை துருக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
துருக்கி ஜனாதிபதி மற்றும் ஸ்வீடன் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிற அரச தலைவர்கள் துருக்கிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.