ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காது, நாட்டின் இரண்டு மில்லியன் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மக்களுக்காக கையகப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க தற்போது உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றார் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பது தொடர்பில் பாரிஸிலும் இங்கிலாந்திலும் உலகிலுள்ள அனைத்து உதவி குழுக்களுடனும் தொடர்ச்சியாக கலந்துரையாடிய ஒவ்வொரு நாடும் தற்போதைய வேலைத்திட்டத்தை பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இப்படிச் சரிந்த நாட்டை மீட்பதற்கு சட்டங்கள், ஆணைகள், பல்வேறு திருத்தங்கள் அவசியம் எனவும், அதனை உலக நாடுகள் கூட பின்பற்றுவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தலைமையிலான சில குழுக்கள் நாட்டு மக்களை விமர்சித்து தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகவே தெரிகிறது எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அந்தச் சட்டங்கள் தவறான வழியில் உள்ளன. அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் விஷேட உரையாற்றிய போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.