பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அவர் எடுத்த இந்த முடிவு குறித்து வர்ணனையாளர்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
உணர்ச்சிவசப்பட்ட தமீம் இக்பால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“இது என்னுடைய முடிவு. நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்தேன். மேலும் சிறந்ததை கொடுக்க முயற்சித்தேன். இங்கிருந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெறுகிறேன்” என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி தான் தனது கடைசி சர்வதேச போட்டி என தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தமீம் இக்பால் 241 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8313 ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும், 70 டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ஓட்டங்களின் எண்ணிக்கை 5134 ஆகும்.