ஒரு பெண் வைத்தியர் உட்பட மூன்று வைத்தியர்கள் பத்து நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 8ம் வார்டில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வார்டுக்கு குழந்தைகளை உட்சேர்ப்பதில் தடைகள் நிலவுவதாக அதனால் குறித்த செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.