ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் விசாரணையில் அவ்வாறான வாயு கசிவு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முனையத்தில் இருந்து வாயு கசிவதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விசாரணை நடத்தியதாக கூறப்படும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், வாயு கசிவு குறித்த வதந்திகள் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளது.