தென்னாப்பிரிக்காவின் போக்ஸ்பர்க் குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைவிடப்பட்ட கண்ணிவெடி அகழ்வு பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைட்ரேட் ஆக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.