நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை நிலைமையில் இன்று (06) முதல் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் பல மழைக்காலங்கள் சாத்தியமாகும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. 45-50 வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.