ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அழகு நிலையங்களையும் மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த இடங்களை மூடுவதற்கு ஜூலை 2ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள சமீபத்திய நிபந்தனையாக இது கருதப்படுகிறது.
2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தொடங்கியவுடன் பெண்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி இருந்த 1996 – 2001 காலகட்டத்தில், சலூன்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை, 2001 க்குப் பிறகு அவை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.