1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, கோதுமை மா இறக்குமதி அனுமதி முறையை மீண்டும் நிறுவுவதற்காக 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் ஜூன் 14, 2023 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட சட்டவிதிமுறையை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.