இன்று முதல் சோற்றுப் பொதி மற்றும் கொத்து விலை 10% இனால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் விலைகள் திருத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் தலைவர் அசேல சம்பத் கூறுகையில், இந்த விலை திருத்தம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டதன் பலன் நுகர்வோருக்கும் கிடைக்க வேண்டும்.
மேலும் உணவு மற்றும் பேக்கரி பொருட்களை நியாயமான விலையில் வழங்க வேண்டும், இல்லையெனில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் வணிக நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்குள் முடிவுக்கு வரும் என்று கூறினார்.