follow the truth

follow the truth

January, 24, 2025
Homeஉள்நாடுவானிலை எச்சரிக்கை

வானிலை எச்சரிக்கை

Published on

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில வரையான கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கடல் அலையின் உயரம் 2.5-3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடல் சீற்றமாகவும், சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்.

குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் செய்வதில் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கப்பற்துறையினரை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை : நாடளாவியரீதியில் முதலிடம் பெற்ற மதிப்பெண் 188

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன...

கொழும்பில் மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு

கொழும்பு மாநகர சபைப் பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக...