follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1மலையகப் பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு

மலையகப் பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு

Published on

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு தபால் புகையிரதத்தின் இயந்திரம் புகையிரத பாதையில் மரமொன்று வீழ்ந்ததன் காரணமாக தடம் புரண்டதாக அதன் துணை நிர்வாகி எம்.ஜே.இதிபோலகே குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மலையக வீதியின் ரயில் சேவை கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக எம். ஜே.இதிபோலகே குறிப்பிட்டார்.

இதேவேளை, கும்புருகமுவ மற்றும் வெலிகமவிற்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கரையோரப் பாதையில் பயணிக்கும் பல ரயில்கள் தாமதமாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன...

“மஹிந்தவின் கடைசி மூச்சு வரை நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன்” – அனுஷா

மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப்...

கொழும்பில் மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு

கொழும்பு மாநகர சபைப் பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக...