இந்த வருடத்தில் இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானம் 25% குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவில் இருந்து பெறப்படும் ஆர்டர்கள் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஐரோப்பாவில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட ஆடைப் பொருட்களின் கையிருப்பு இன்னும் தீர்ந்து போகாததால் புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 363.3 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 1,843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும், இது கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 16.5% வீழ்ச்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என குறித்து தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 14.2% குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஆடைகளின் ஏற்றுமதி வருவாயும் 3.1% குறைந்துள்ளது. மற்ற முடிக்கப்பட்ட ஆடை தயாரிப்புகளும் 19% சரிந்துள்ளதாக குறித்த அறிக்கை கூறுகிறது.