அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
என அறிய முடிகிறது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘கூட்டம் சிறப்பாக நடந்தது, ஆசிரியர் சம்பள முரண்பாடுகள், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும் வாரத்திற்கான பாராளுமன்ற வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினோம். உர விவகாரம் நேற்றிரவும் விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட பின்னூட்டங்களுடன், உரப் பிரச்சினை மற்றும் ஆசிரியர் சம்பளப் பிரச்சினை காலப்போக்கில் தீர்க்கப்படும். நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்றுள்ளோம்,’ என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்