பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகளால் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச் சண்டையில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.