பாராளுமன்றத்தை கூட்டி, கோடிக்கணக்கான மக்களின் பணத்தை வீணாக செலவழித்து, எல்லையில்லாமல் நிதி அதிகாரம் குறித்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபர் ரஹ்மான் கொழும்பில் தெரிவித்தார்.
ஒரு வேளை உணவுக்கு மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு பட்டையை இறுக்குமாறு அறிவுரை வழங்கி மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வதாக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை வீட்டோ செய்து அதன் அதிகாரங்களை அபகரித்து ரணில் விக்கிரமசிங்க தீவிர ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.