நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகுக்கு ரூ.30 என வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வகைக்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
60 அலகுகளுக்கு குறைவான பிரிவில் அலகு கட்டணம் ரூ.42ல் இருந்து ரூ.32 ஆகவும், அந்த பிரிவினருக்கு ரூ.650 ஆக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் ரூ.300 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 அலகுகளுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு அலகு கட்டணம் ரூ.42ல் இருந்து ரூ.35 ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் ரூ.1500ல் இருந்து ரூ.1000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் கீழே,