பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சபை காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் கூடவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
எவ்வாறாயினும், அவர் நேற்று மாலை 6 மணியளவில் வந்ததாகவும், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை முடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவுக்கு வழங்கப்பட்ட 6 மாத சேவை நீடிப்பு எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ விமானப்படை தளபதியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.