இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
போட்டியில் 119 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று இலக்கைக் கடந்தது.