மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னகோன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு இன்று (23) அறிவிக்கப்பட இருந்தது.
ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘கோட்டா கோ’ தாக்குதலின் சந்தேகநபராக தம்மை பெயரிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.