கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.