follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு 

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு 

Published on

நாட்டின் பிரதான அரசாங்க வைத்தியசாலையான காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலையால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 556 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 460 வைத்தியர்கள் உள்ளதாகவும், இந்த வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் யு.எம். ரங்கவிடம் வினவியபோது;

தற்போது சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு போதிய வைத்தியர்களை வழங்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கோரிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை அமைச்சகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...

அரசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் ரூபா வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும்...

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி...