சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியவர்களில் முதலமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதரகங்களின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.