முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வீடு வழங்கப்படும் என தெரிவித்து நபர் ஒருவரிடமிருந்து 70 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.