follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1"அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல"

“அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல”

Published on

குருந்தன்மலை விகாரை குறித்து பேசப்படும் நிலையில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், பலப்பிட்டியவில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பதிலளித்தார்.

அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விதுர விக்கிரமநாயக்க பதிலளிக்கையில்;

“பௌத்த மதத்திற்கும் சாசனத்திற்கும் ஒரு சவால் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டது.

எங்களை அடிக்கக்கூடிய எல்லா பக்கத்திலிருந்தும் அடிக்கிறார்கள். புத்த பெருமானின் போதனைகளின்படி நாம் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது கூச்சம் அல்ல.

நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அரச சட்டம் மறுபக்கம்.

இவை இரண்டையும் மாற்றியமைக்க வேண்டும். நாம் அதை அனுசரித்துச் செல்லும்போது அதைக் கோழைத்தனம் என்று சிலர் நினைக்கிறார்கள். இல்லை. சரியான நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களுக்கான போஷாக்கு உணவு திட்டம் – 2025ல் நடைமுறைக்கு

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான...

06 மணி நேரம் வாக்குமூலத்தின் பின் CIDயிலிருந்து வௌியேறினார் மனுஷ

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து...

இன்று மீண்டும் மூடப்படவுள்ள கண்டி – மஹியங்கனை வீதி

கண்டி - மஹியங்கனை வீதி இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை(22) காலை 6 மணி வரை...