சில ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்யத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18) சீனாவின் பெய்ஜிங்கை வந்தடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த பயணத்தை திட்டமிட்டிருந்த அவர், சீனாவால் ஏவப்பட்ட “உளவு” பலூன் காரணமாக அதை ஒத்திவைத்தார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் பல்வேறு காரணங்களால் முரண்படுகின்றன.
2021 ஜனவரியில் ஜனாதிபதி ஜோ பிடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அரசாங்க அதிகாரி பிளிங்கன் ஆவார்.
சீனாவில் இரண்டு நாட்கள் தங்கவுள்ள அவர், அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.