உலக புகழ்பெற்ற கால்பந்து கழகங்களின் முன்னணியான கழகமே இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் யுனைடட்.
இந்த கழகத்தை 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கட்டார் நாட்டின் ஷேய்க் ஒருவருக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் கட்டாரின் முன்னாள் பிரதமரின் மகனான ஷேக் ஜாசிம் இந்த கழகத்தை வாங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் குறித்த செய்தியை உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மஞ்செஸ்டர் யுனைடட் அணியின் சொந்தக்காரராக திகழும் இங்கிலாந்தின் பிரபல க்ளாஸர் குடும்பம் (Glazer family) இவ்வாறு கட்டார் ஷெய்கிற்கு இந்த கழகத்தை விற்பனை செய்ய விருப்பத்துடன் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இரசாயன தயாரிப்பு நிறுவனமான INEOS உரிமையாளர் புகழ் பெட்ரா கோடீஸ்வரர் ஜிம் ராட்க்ளிஃப கூட இந்த கழகத்தை தன்வசப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆனால் க்ளாஸர் குடும்பம் (Glazer family) கட்டார் ஷேய்க் ஜாசிம்க்கு இந்த கழகத்தை விற்பனை செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்படி இந்த கழகம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றால் உலக அளவில் அதி கூடிய விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கழகம் என்ற பெருமையை மஞ்செஸ்டர் கழகம் பெரும். அத்தோடு ஒரு அரேபிய நாடு மேற்கொண்ட விளையாட்டு ஒப்பந்தங்களில் அதியுயர் விலை கொண்ட ஒப்பந்தமாக இது பார்க்கப்படும்.