அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் மக்களும் வறுமை நிலைக்கு தள்ளப்படுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்
69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை 70/77 ஆண்டு வரிசை யுகத்துக்கு கொண்டுசெல்லவா ? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை.
பொருட்களின் விலை அதிகரிப்பால் ஓய்வூதியர்கள் மாத்திரமல்ல, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு சிறியதொரு தொகையை வழங்கி, அதனை எரிவாயு விலையை அதிகரிக்கச்செய்து பெற்றிருக்கின்றது. கெளரவமாக வாழ்ந்துவந்த விவசாயிகளை வீதிக்கி இழுத்திருக்கின்றது.
அத்துடன் அரசாங்கம் பலவீனமடைந்து செல்லும்போது 7அறிவு உடைய அமைச்சர் வந்ததுடன் அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்தனர். 7 அறிவு உடைய அமைச்சருக்கு என்ன நடந்தது என தெரியாது. இந்த அரசாங்கத்துக்கு அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது.
ஆனால் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியும் என்பதை நாளாந்தம் உறுதிப்படுத்தி வருகின்றது. மக்களின் கேள்விக்கும் அரசாங்கத்திடம் பதில் இல்லை.
அத்துடன் அரசாங்கம் வரிசை யுகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பால்மாவுக்கு வரிசை, எரிவாயு பெற்றுக்கொள்ள வரிசை, சீமெந்தி வாங்குவதற்கு வரிசை என அரசாங்கம் 70/77 காலத்தையே மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது.
69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டது 70/77 யுகத்தை உருவாக்குவதற்கா? என கேட்கிக்றோம்.
அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக நாட்டில் இருக்கும் 220இலட்சம் மக்களும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கா மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டீர்கள் என கேட்கின்றேன்? என அவர் கேள்வியெழுப்பினார்.