2023 ஆம் ஆண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola அறக்கட்டளை, Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியன இணைந்து, கொழும்பில் மேம்பட்ட கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) ‘Eko Wave’ திறந்து வைத்தது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் பத்திரகே கலந்துகொண்டார்.
‘பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்’ (Solutions to Plastic Pollution) என்ற உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான ஐக்கிய நாடுகளின் தொனிப்பொருளுக்கு ஏற்ப தீர்க்கமான நடவடிக்கையை எடுத்து, கொழும்பில் உள்ள Eko Wave MRF சுற்றுச்சூழல் பேண்தகைமையான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் உள்ளூர் பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைகளுக்கு வலுவான தீர்வை வழங்குகிறது.
பிராந்தியத்தில் நிலவும் பிளாஸ்டிக்-கழிவு நிர்வகிப்பு சவால்களுக்கு ஒரு விரிவான தீர்வாக, MRF திறமையான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கமான கழிவு செயலாக்க செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது, பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஒரு பாராட்டத்தக்க முன்மாதிரியாக இது அமைகிறது.
MRF ஆனது Coca-Cola இன் உதவி அளிக்கும் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையில் உள்ள பிரபல பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றின் நிதி மற்றும் ஆதரவுடன் நிறுவப்பட்டது.
ஜனதாக்ஷன் (ஜிடிஇ) லிமிடெட், ஒரு மரியாதைக்குரிய இலாப நோக்கற்ற அமைப்பால் செயல்படுத்தப்பட்டது, இது சுற்று பொருளாதார நடைமுறைகளை மேம்படுத்துவதிலும், நாட்டில் குறைந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னேற்றுவதிலும் நிபுணத்துவம் பெற்றதற்காக அங்கீகரிக்கப்பட்டது.
Eko Wave கொழும்பில் உள்ள பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்பு சவால்களை நிவர்த்தி செய்கிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் 20,000 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து செயலாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
கொழும்பு, இலங்கையின் பிரதான வர்த்தக மையமாக இருப்பதால், கணிசமான கழிவு அகற்றல் பிரச்சினையை எதிர்கொள்கிறது, நாளொன்றுக்கு சுமார் 1057.5 மெட்ரிக் தொன் கழிவுகள், முதன்மையாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
இந்த சவாலை சமாளிக்க, மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு சேகரிப்பை மேம்படுத்த முறைசாரா கழிவு சேகரிப்பு வலையமைப்புடன் ஒத்துழைப்பதன் மூலம் Eko Wave ஒரு செயல்திறன்மிக்க மற்றும் சமூகத்தை மையப்படுத்திய அணுகுமுறையை பின்பற்றுகிறது. மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை திறமையாக சேகரித்து செயலாக்குவதில் MRF முக்கிய பங்கு வகிக்கிறது. சீக்கிரம் உக்காத கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மதிப்பை அதிகரிக்க இது Balers மற்றும் Crushersகளைப் பயன்படுத்துகிறது.
இந்த வசதி, PET பிளாஸ்டிக்கை மையமாகக் கொண்டு, மீள்சுழற்சி செய்யக்கூடியவற்றைப் பிரித்து, சுருக்கி, நசுக்கி, அவற்றை கச்சிதமான Balers மற்றும் துகள்களாக மாற்றுகிறது. இந்த பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பின்னர் இலங்கையின் முன்னணி பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles க்கு அனுப்பப்படுகின்றன, இது தூரிகைகள் மற்றும் ஆடைகளுக்கான நூல் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து 15 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதற்கும் எங்களின் கூட்டு முயற்சிகளில் Eko Wave இன் வெளியீடு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.” என The Coca-Cola அறக்கட்டளையின் தலைவர் Saadia Madsbjerg கூறினார்.
“இந்த கூட்டு முயற்சிகள் மூலம், TCCF பிளாஸ்டிக்-கழிவு நிர்வகிப்பு தீர்வை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், சமூக நலன் சார்ந்த கவலைகளையும் தீர்க்க முடியும். இந்த வசதிகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் கழிவு சேகரிப்பாளர்களை மேம்படுத்துவதில் எங்கள் அர்ப்பணிப்பு உள்ளது.
குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதையும், முக்கியமாக, கழிவு அகற்றும் பணியாளர்களின் கௌரவத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த திட்டத்தை நிறைவேற்றியதற்காக எங்கள் பங்குதாரர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”
Eco Spindles Pvt. Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாந்த மாலிம்படகே கூறுகையில், “இந்தப் பொருள் மீட்பு வசதிகள், குறிப்பாக கொழும்பில் நிலவும் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான விரிவான தீர்வுகள் என்று நாங்கள் நம்புகிறோம்.
“மாதத்திற்கு 400 தொன்களுக்கு மேல் மீள்சுழற்சி செய்யும் திறன் கொண்ட நாங்கள், தூய்மையான, பசுமையான, நிலையான இலங்கை என்ற எங்களது இலக்கை அடைய அதிக வாய்ப்புள்ளது. இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது நிலைத்தன்மை மற்றும் ஒரு வட்டப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது.”
Janathakshan GTE இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜனக ஹேமதிலக்க கூறுகையில், “இந்த முயற்சி திட்ட பயனாளிகளுக்கு உடனடி நன்மைகளைத் தாண்டி, அதன் நேர்மறையான தாக்கத்தை நாட்டிற்கு ஏற்படுத்துகிறது.
நாம் ஒன்றாக இணைந்து ஒரு வட்டப் பொருளாதாரத்தின் கொள்கைகளான பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வு (எண். 12), காலநிலை நடவடிக்கை (எண். 13) மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் (எண். 14) ஆகிய இலக்குளை அடைய ஊக்குவிக்க முடியும்.
இது மாவட்டத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது மற்றும் தூய்மையான சூழலை நோக்கி வழி வகுக்கிறது. இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.”