விதுர விக்கிரமநாயக்க புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்கவின் பதவி விலகல் நாட்டில் சர்ச்சைக்குரிய சூழலை உருவாக்கியுள்ள போதிலும், கடந்த சில நாட்களாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கூட, அமைச்சரவை தீர்மானங்களை கூட நடைமுறைப்படுத்த அமைச்சர் விரும்பவில்லை என அநுர மனதுங்க கருத்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொறுப்பு அமைச்சருக்கும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையிலான பிரச்சினையே இந்த நிலைமை எனவும், அந்த பிரச்சினைகள் தமது தரப்புக்கு தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புதான் தமது கட்சியின் பிரச்சினை எனத் தெரிவித்த சபை உறுப்பினர் சுமந்திரன், விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு தமது கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.