வங்குரோத்தடைந்த நாட்டிலிருந்து நாம் மீள வேண்டும் எனவும்,மீண்டுமொரு வங்குரோத்து நிலைக்கு செல்லாமல் இருக்க எமது நடவடிக்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,இவை எல்லாவற்றிற்குமுரிய பொதுப் புள்ளி அறிவாகும் எனவும்,இந்த அறிவை அடிப்படையாக் கொண்டு செயல்பாடுகளை ஒழுங்கமைத்தால் வெற்றிகரமான இலக்குகளை எட்டலாம் எனவும், வங்குரோத்தடையும் நிலைக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது எனவும்,நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் யுகம் உருவாகாமல் தடுப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) தெரிவித்தார்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாகவும்,நாடு பூராகவும்,கல்வி,சுகாதாரம் அபிவிருத்தி போன்ற பல்வேறு திட்டங்களை பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டத்தின் ஊடக நடைமுறைப்படுத்தி வருவதாகவும்,அதன் ஒரு கட்டமாகவே இன்று (13) அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் கல்லூரிக்கு 50 இலட்சம் பெறுமதியான நவீன பேருந்தொன்று வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடு அறிவின் மையமாக மாறும் என பல்வேறு தரப்பினர் கூறினாலும்,ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை பலரும் மறந்து விட்டாலும்,ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சியிலிருந்தும் எமது நாட்டை அறிவு மைய நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச அதிகராத்துடனையே இதுவரை மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியானது வரலாற்றை மாற்றியமைத்து எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே மக்கள் பயண் தரும் சேவைகளை ஆற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலவசக் கல்வின் முன்னோடியான கண்ணங்கர அவர்களின் எண்ணக்கருவை நவீன போக்கிற்கு ஏற்ப பலப்படுத்துவதன் ஓர் அங்கமே இந்த பேருந்து வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் பிரகாரமே 71 ஆவது பேருந்து இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும்,1970 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அன்னாரது 11 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக தீயணைப்புப் படை கட்டிடத்தில் 4 ஆசிரியர்களுடன் ஆரம்பமான இந்த பாடசாலை 6 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளதாகவும், இப்பாடசாலைக்கு இந்நன்கொடையை வழங்க முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி மட்டுமின்றி சுகாதாரமும் ஒரு காரணம் என்பதால் எதிர்க்கட்சி இதில் தீவிர கவனம் செலுத்தியுள்தாகவும்,மூச்சுத் திட்டத்தின் கீழ் 171.9 மில்லியன் வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருட்டு,இலஞ்சம்,ஊழல் ஒழிக்கப்படுவது மட்டுமின்றி, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து, சுகாதாரம்,கல்வி,விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறித்த நிதியை பயன்படுத்தி அத்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அனைத்து திருடர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அறிவை அடிப்படையாக் கொள்ளாத,உண்மைக்குப் புறம்பாக மக்களை ஏமாற்றும் ஆட்சித் தீர்மானங்களாலையே முன்னைய அரசாங்கம் எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றதாகும்,மீண்டும் இவ்வாறான அடிப்படைகளில் நின்று மக்களை ஏமாற்றும் காலத்தை தோற்கடிக்க வேண்டுமானால் அறிவை முன்னிலையாக் கொண்ட சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் வேறுபாடுகள் நிலவுவதாகவும்,நாட்டில் அனைவருக்கும் கல்வி அணுகலுக்கான சமமான வாய்ப்புகள் நிலவுகிறதா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வாறு பேருந்துகள் வழங்கும் போது சிலர் தரப்பினர் பல்வேறு விதமாக விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக தொழில் சந்தைக்கு ஏற்ப மனித வளங்களை எம்மால் வழங்க முடியுமான நிலைக்கு எமது நாடு முன்னகர வேண்டும் எனவும்,சிங்களம் மாத்திரம் போன்ற போலியான தேசியவாத பரப்புரைகளை விடுத்து யதார்த்தமாக இது குறித்து நோக்காவிட்டால் எம்மால் ஓர் நாடாக தலை தூக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் ஆங்கில மொழி ஆய்வுகூடங்களை நிறுவ வேண்டும் எனவும்,வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,சீன மற்றும் ஹிந்தி மொழிகளை கற்க வேண்டும் எனவும்,இவற்றை தாம் கூறும் போது சஜித் பிரேமதாச ஓர் தேச துரோகி என அழைப்பாளர் எனவும்,இவ்வாறு முறையாக மொழிகளை கற்பதன் மூலம் சீன இந்திய தொழில் சந்தையை எம்மால் வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
“சிங்களம் மாத்திரம்,சிங்களம் மாத்திரம்” எனக் கூறி இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடியாது எனவும்,நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் எனவும், நாம் இன்னும் குறுகிய மனப்பாங்கில் சிந்திக்க முடியாது எனவும், சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் நாம் ஈடுபட வேண்டும் எனவும், இலங்கை உற்பத்திகளை உலகில் விசாலமான தொழில் சந்தைகளான சீன இந்திய தொழில் சந்தைகளில் எவ்வாறு விற்பனை செய்வது, எவ்வாறு ஏற்றுமதி செய்வதென்பது குறித்து புதிதாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்க,சீனா,ஜப்பான், இந்தியா மாத்திரமல்லாது எம்மால் இன்னும் அணுக முடியாதுள்ள தொழில் சந்தைகளான ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கும் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிலையை எட்ட வேண்டும் எனவும்,நாடாக நமக்கு தூரநோக்கு ரீதியிலான நீண்டதொரு பயணமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியில் நிலவும் ஆசியர் பற்றாக்குறையை அடுத்த வரும் பாராளுமன்ற அமர்வில் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து நிலையான தீர்வுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் தமதுரையில் அவர் மேலும் தெரிவித்தார்.