லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.
அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஐந்து அணிகளின் வீரர்கள் உரிமையாளர்களால் வாங்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஏலத்தில், உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர்.
இந்தியா – சுரேஷ் ரெய்னா
ஆஸ்திரேலியா – க்றிஸ் லீன், பென் கட்டின்
தென்னாப்பிரிக்கா – ரேசி வெண்ட டூசன்
நியூசிலாந்து – கொலின் டி கிரண்ட்ஹோம்
வங்கதேசம் – தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம்
வெஸ்ட் இண்டீஸ் – எவின் லூவிஸ், கார்லோஸ் பிராத்வைட்
ஆப்கானிஸ்தான் – நூர் அகமட்லா, முகமது நபி