ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயப்படுத்தப்படுவதன் ஊடாக தேசிய பாதுகாப்பு தொடர்பில் உணர்திறன் வாய்ந்த தகவல்கள் வெளிவரும் சாத்தியம் காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.