ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்காக இலங்கை அணி இன்று (09) சிம்பாப்வே செல்லவுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவும் அணியுடன் செல்லவுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அதற்கு முன்னதாக இலங்கை அணி 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளது.
இது நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் உள்ளது.