உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக இன்று (08) நடத்தப்படவிருந்த பல எதிர்ப்பு ஊர்வலங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு பிரவேசிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி, சரண வீதி ஊடாக தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி இந்த போராட்டத்தை தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.