follow the truth

follow the truth

January, 22, 2025
Homeவிளையாட்டுரொனால்டோவை தொடர்ந்து பென்சிமா சவுதி அரேபியாவுக்கு

ரொனால்டோவை தொடர்ந்து பென்சிமா சவுதி அரேபியாவுக்கு

Published on

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் முன்கள வீரர் கரீம் பென்சிமா, சவுதி அரேபியாவின் அல் இட்டிஹாத் கால்பந்து கிளப்பில் சேர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சுமார் 3 வருடங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கட்டுள்ளது.

சவுதி அரேபியா வருவாயை அதிகரிக்க பிரசித்தமான வீரர்களை ஈர்க்கவும், கால்பந்து க்ளப்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை அறிவித்து ஒரு நாளைக்கு பின்னரே இந்த ஒப்பந்தம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

பென்சிமாவின் சம்பளம் குறித்து எந்த தகவல்களையும் அல் இட்டிஹாத் க்ளப் வெளியிடாவிட்டாலும் கடந்த திங்கள் அன்று இங்கிலாந்து மட்ரிட்டில் ஒப்பந்தம் நடைபெற்றது என்றும் க்ளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இன்னோர் நாட்டில் நான் கால்பந்து லீக்கில் விளையாடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று பென்சிமா கூறியதாக அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

“கரீம் பென்சிமா” ஒன்பதாம் நம்பர் சட்டையை அணிந்து, அடுத்த சீசனில் சவுதி லீக்கில் அறிமுகமாகும்போது, “எல்லாக் கண்களும் கரீம் மீது இருக்கும்” என்று அல் இத்திஹாத் தலைவர் அன்மர் பின் அப்துல்லா அல்ஹைலே, தெரிவித்துள்ளார்.

பென்சிமாவின் சாதனைகள்

பென்சிமா 2009 இல் லீக் 1 (Ligue 1) இல் மட்ரிட் அணியில் சேர்ந்தார்.

அந்த கிளப்பில் விளையாடிய பென்சிமா ஐந்து சாம்பியன்ஸ் லீக், நான்கு லாலிகா பட்டங்கள் மற்றும் மூன்று கோபாஸ் டெல் ரே ஆகியவற்றை வெற்றிகொண்டுள்ளார். இது அவரது கால்பந்து வரலாற்றில் புகழ் பூத்த காலம் என்று கூறப்படுகின்றது.

அவர் 648 போட்டிகளில் விளையாடி, ரியல் ஆல்-டைம் கோல்கள் (Real’s all-time goalscoring) பட்டியலில் 354 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.

“அல் இட்டிஹாட் கிளப்பின் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பரிமாற்றம்” இந்த பென்சிமாவின் வருகை என்று கூறப்படுகின்றது.

ரியாத்தை தளமாகக் கொண்ட கிளப்களான அல் ஹிலால் மற்றும் அல் நாஸ்ருடன் அல் இட்டிஹாட் போட்டியிடும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கால்பந்து கிளப்புகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரேபியா அறிவித்தது, இது நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை முதலீடு செய்து கையகப்படுத்த வலி செய்யும் என்றும் கூறப்படுகின்றது.

2030ஆம் ஆண்டுக்குள் சவுதி புரோ லீக்கின் (Saudi Pro League) வருவாயை வருடம் ஒன்றுக்கு 1.8 பில்லியன் ரியால்களாக ($480m) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானை இந்தியா அவமானப்படுத்துகிறதா?

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ மீண்டும் ஒரு இடியை இறக்கி இருப்பது கிரிக்கெட் உலகில்...

ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்...

லசித் மலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ வெளியானது

இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இது...